அய்யப்பன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், வேலம்பட்டியில் அய்யப்பன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-25 09:08 GMT

அய்யப்பன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலம்பட்டியில் உள்ள அய்யப்பன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. பின்னர் முதற்கால யாக பூஜையும் இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை நடந்ததை தொடர்ந்து. காசி, ராமேஸ்வரம், அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் கோயிலை சுற்றி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News