ஜம்மண அள்ளியில் ஐயப்பசாமி குருபூஜை
சாமி தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது;
Update: 2023-12-17 06:55 GMT
ஜம்மண அள்ளியில் ஐயப்பசாமி குருபூஜை
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஜம்மணஅள்ளி கிராமத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் குரு பூஜை மற்றும் கன்னி பூஜை விழா குருசாமி செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விநாயகர், முருகர், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, சுற்றுப்புற பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. பூஜையில் தவமணி, மூர்த்தி, சுதாகர், மாரியப்பன், ஸ்டா லின், ராமஜெயம், கிருஷ்ணன், பழனிவேல் உள்ளிட்ட குருசா மிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.