கோவை:காங்கிரஸ்bசார்பில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பிரதமர் மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை புரிந்த நிலையில், அவரை கண்டித்தும், திரும்பி செல்ல வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், வக்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், தமிழகத்தின் மீதான பாரபட்சமான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.