குப்பை தொட்டியில் குழந்தை - நீதிமன்றத்தில் இருவர் சரண்
குப்பை தொட்டியில் குழந்தை - இளம்பெண்ணும் வாலிபரும் முன் ஜாமின் மனுவுடன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடந்தனர்;
Update: 2024-02-28 16:21 GMT
நீதிமன்றம்
பூந்தமல்லி, ராமானுஜம் கூடம் தெரு, தனியார் மகளிர் விடுதி அருகே உள்ள குப்பை தொட்டியில் கிடந்த, பச்சிளம் பெண் குழந்தையை, அதே பகுதியை சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டார். எறும்புகள் கடித்து காயமடைந்த அந்த குழந்தையை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்த பூந்தமல்லி போலீசார், இது குறித்து விசாரித்து வந்தனர். திருவாரூரை சேர்ந்த இளம்பெண், பூந்தமல்லி மகளிர் விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதுார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். திருவாரூரை சேர்ந்த வாலிபரை காதலித்து, நெருங்கிய பழகிய நிலையில் கர்ப்பமடைந்தார். சம்பவத்தன்று கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த அவர், குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது. இந்த நிலையில் இளம்பெண்ணும், வாலிபரும், முன் ஜாமின் மனுவுடன் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடந்தனர். விசாரணைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், டி.என்.ஏ., பரிசோதனைக்கு பிறகு குழந்தை அவர்களிடத்தில் ஒப்படைக்கப்படுமா அல்லது காப்பகத்தில் சேர்க்கப்படுமா என்பதை குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் முடிவு செய்வர் என போலீசார் தெரிவித்தனர்.