100 கர்ப்பிணியருக்கு வளைகாப்பு விழா
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்துாரில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், ஆலந்துாரில் , சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், 100 கர்ப்பிணியருக்கு நலுங்கு வைத்து, வளைகாப்பு நடத்தப்பட்டது. அரசு சார்பில், சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணியருக்கு வழங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது,
கர்ப்பிணியருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு சத்து மாத்திரைகளை, அரசு வழங்கி வருகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள், 10 கிலோ எடை கூட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். கடந்த இரு ஆண்டுகளில் சென்னையில், 1.32 லட்சம் கர்ப்பிணியர் பயன்பெறும் வகையில், 3.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.