பக்ரீத் பண்டிகை; சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை 'விறுவிறு'

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

Update: 2024-06-16 06:36 GMT

 பக்ரீத் பண்டிகை; சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை 'விறுவிறு'

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட் பட்ட பகுதியில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் பல லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகும். இந்த ஆட்டு சந்தைக்கு திருச்சி, கரூர், அரிய லூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்கு றிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் ஏராள மானோர் இந்த சந்தைக்கு வருவார்கள். இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) பக்ரித் பண்டிகை என்பதால், நேற்று நடைப்பெற்ற சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் கூடுதலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர். ஒரு ஆடு சுமார் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை விலை போனது வழக்கத்தைவிட ஆடுக ளின் விற்பனை அதிக அளவில் நடைபெற்றதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று நடைபெற்ற இந்த ஆட்டுச் |சந்தையில் ரூ.  50 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைப்பெற்றது.

Tags:    

Similar News