பால முத்துக்குமார சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீபால முத்துக்குமார சுவாமி ஆலய, கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.;

Update: 2024-04-22 08:07 GMT

கும்பாபிஷேகம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிதம்பரம் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுத்துகுமார சுவாமி திருக்கோவிலின் ஜீரணோதரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம். ஏப்ரல் 21ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த 18ஆம் தேதி மங்கள இசையுடன் கணபதி மற்றும் லட்சுமி ஹோமத்துடன் பூஜை, தொடங்கி நடைபெற்றது,

இதனை தொடர்ந்து மூன்று கால பூஜைகள் நடைபெற்றதையடுத்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ சப்த கன்னிமார்கள், ஸ்ரீ நாக தேவதைகள், நவக்கிரகங்கள், ஐஸ்வர்ய மகாலட்சுமி, உடனான பரிவார தெய்வங்களுடன் ஸ்ரீ பால முத்துக்குமார சுவாமிக்கு பிரதிஷ்டை அஷ்டபந்தனம் நடைபெற்றது.

Advertisement

இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், யாகசாலையில் கலச பூஜை, முடிந்து கிடங்கள் புறப்பட்டு கோவில் கோபுரம் எடுத்துவரப்பட்டு அங்கு அனைத்து கலசங்களுக்கும் பூஜை செய்து, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகாதீபாரதனின் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் பெரம்பலூர், நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News