எம்.களத்தூர் சிவன் கோவில் புதுப்பித்து கட்டுவதற்காக பாலாலய விழா

ஆயிரம் ஆண்டுகள் பழமையும் தொன்மையும் வாய்ந்த எம்.களத்தூர் சிவன் கோவில் புதுப்பித்து கட்டுவதற்காக பாலாலய விழா நடைபெற்றது.

Update: 2023-12-15 16:25 GMT

பால்ய விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தொட்டியம் அருகே உள்ள எம் களத்தூரில் தொன்மையும் பழமையும் வாய்ந்த ஈசநாதிசீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட வேண்டும் என இப்பகுதி சிவ பக்தர்களும் பொதுமக்களும் சிறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு வாயிலாக கோயிலை புதுப்பித்து கட்டிட தமிழக அரசிடமிருந்து ரூபாய் ஒரு கோடியே 80- லட்சம் நிதியை பெற்று தந்துள்ளார்.

கோயில் திருப்பணி துவங்குவதற்காக நடைபெற்ற பாலாலய பூஜைக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார் முன்னதாக விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம் உள்பட பூஜைகளையும் ஹோமங்களையும் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

இந்து சமய அறநிலைத்துறை திருச்சி இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமணன், தொட்டியம் பகுதி கோவில் ஆய்வாளர் ஆனந்தி, எம். களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணிமற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News