சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் இன்று பாலாலய சிறப்பு பூஜை தொடக்கம்

சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் இன்று பாலாலய சிறப்பு பூஜை தொடங்கியது.

Update: 2024-02-29 05:52 GMT

சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் இன்று பாலாலய சிறப்பு பூஜை தொடங்கியது.


சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கும், கோபுரங்களுக்கு வண்ணங்கள் பூசுவதற்காக பாலாலய பூஜைகள் அத்திகட்டை, கண்ணாடிகளை கொண்டு கோவில் வளாகத்தில் பிப்.29) இன்று) மாலை கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி, கலச பூஜைகளுடன் தொடங்கி மார்ச் 1ம் தேதி காலை கணபதி, கலச பூஜைகளும், பாலாலய சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News