திருவெண்காடு நவக்கிரக புதன் ஆலயத்தில் பாலாஸ்தாபனம்

சீர்காழி அருகே பிரசித்திப் பெற்ற புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் பாலாஸ்தாபனம் நடைபெற்றது.

Update: 2024-03-30 04:21 GMT

சீர்காழி அருகே பிரசித்திப் பெற்ற புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் பாலாஸ்தாபனம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான 6 தலங்களில் முதன்மையான இக்கோயிலில் அகோர மூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் திருப்பணிகள் தொடங்கிட பாலா ஸ்தாபனம் இன்று நடைபெற்றது.

இக்கோயிலில் ரூபாய் 12 கோடி யில் திருப்பணி செய்திட அரசு அறிவுறுத்திய அறிவிப்பு வெளியிட்டது அதன்படி திருப்பணிகள் தொடங்கிட ஏதுவாக இன்று விமான பாலாலயம் நடைபெற்றது முன்னதாக அனைத்து சுவாமி அம்பாள் அகோர மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு வழிபாடு தீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து பாலா லயம் செய்ப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து கலசங்கள் புறப்பட்டு கோவில் உட்பிராகம் சுற்றி வந்து 63 நாயன்மார்கள் மண்டபத்தில் விமான பாலாலயம் அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News