சிவகங்கை அருகே கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய பூஜை - நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிறப்பு பூஜைகள் நடைபெற்றன;

Update: 2023-12-10 06:15 GMT

அம்மனுக்கு சிறப்பு பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகே உள்ள இழுப்பங்குடி கிராமத்தில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன், சமேத ஸ்ரீ பால குருநாதன் சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெற்றது. மிகப் பழமையான திருக்கோவிலில் புனரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றதையூட்டி கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று பாலாலய பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அங்காள ஈஸ்வரி அம்மன் மற்றும் வால குருநாதன் சுவாமி சந்தன காப்பு அலங்காரம் செய்து புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்து பேச்சியம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. பின்னர் சிவாச்சாரியார்கள் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தி தீப தூப ஆராதனை ஏக முக தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கும்பாபிஷே விழாவின் நிறைவு திருப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணியை ஆலய பக்த சபை நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News