கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீக்கம் - குவிந்த சுற்றுலா பயணிகள்
கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Update: 2023-10-21 04:46 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த 12ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருவி கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் 9 நாட்களுக்கு பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.