களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
Update: 2023-12-05 03:42 GMT
களக்காடு தலையணை
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பரவலாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அங்குள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.