சத்தியமங்கலத்தில் வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ 2,46,356க்கு வாழைத்தார்கள் விற்பனையானது.

Update: 2024-05-26 05:26 GMT

வாழைத்தார் ஏலம்

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் வரவு தார்கள்= 1056 வியாபாரிகள் =17 ஏலத் தொகை = ரூ 246356 பூவன் = 750 தேன் வாழை = 720 செவ்வாழை = 1180 ரஸ்தாலி = 510 பச்சை நாடன் = 280 ரொம்ப ஸ்ட்டா = 380 மொந்தன் = 280 கதளி = 45 நேந்திரம் = 44
Tags:    

Similar News