ஏரியில் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மீன்வளத்துறை அலுவலர்கள் அதிர்ச்சி !!

ஏரி தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-29 06:49 GMT

கெளுத்தி மீன்

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரி சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஏரி தண்ணீரை பயன்படுத்தி அருகில் உள்ள விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏரியில் குப்பைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்தது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ரூ.19 கோடி செலவில் போடிநாயக்கன்பட்டி ஏரியை சுத்தம் செய்து அழகுப்படுத்தி தண்ணீரை சுகாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன்படி ஏரியில் தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு முன் அதில் உள்ள மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி அப்போது ஏரியில் விரித்த வலையில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின. இந்த மீன்கள் சுமார் 5 கிலோ முதல் 20 கிலோ எடை வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இதை கண்டு மீன்வளத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தடை செய்யப்பட்ட இந்த மீன்களை ஏரியில் கொண்டு வந்து விட்டது யார்? என்பது தெரியவில்லை. மீன்வளத்துறை அலுவலர்கள் ஏரியில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏரி தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News