பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.

Update: 2024-04-02 11:59 GMT

காவல்துறை விசாரணை


கரூர் மாவட்டம், வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட, பகுதியில் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முரளி கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி மன்மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மேதிநகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த இப்ராஹிம் வயது 59 என்பவர், அவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 8- ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும்,இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News