போட்டியின்றி தேர்வான வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்
Update: 2023-12-21 02:49 GMT
நீதிமன்றம்
அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் மாவட்ட உரிமையியல் & குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது. இந்நிலையில் எந்த ஒரு பதவிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வராத காரணத்தினால் விண்ணப்பித்தவர்களின் விருப்ப மனுக்கள் பரிசீலிக்கபட்டு அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டதாக அறிவிக்கபட்டார்கள். அதன்படி தலைவராக காரல் மார்க்ஸ் என்பவரும், செயலாளராக செல்வமணி என்பவரும், துணை தலைவராக கார்த்திகேயன் என்பவரும், துணை செயலாளராக பொன்செல்வம் என்பவரும் தேர்ந்தெடுக்கபட்டதாக இத்தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையர் காயத்ரி தெரிவித்துள்ளார்.