வாக்கு எண்ணும் அறைகளில் தடுப்புக் கம்பிக் கூண்டுகள்: ஆட்சியா் ஆய்வு !

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் கம்பி தடுப்புக் கூண்டுகள் அமைக்கும் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

Update: 2024-04-08 08:17 GMT

ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், திருவரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்படும். இதற்காக ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்படவுள்ளன. இதற்காக ஜமால் முகமது கல்லூரியில் 6 அறைகள் தயாா்படுத்தப்பட்டு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளியிருந்த பகுதிகளில் ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு சிமென்ட் பூச்சு மூலம் அடைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வாக்கு எண்ணும் அறைகளை தயாா்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிடும் வேட்பாளா்களின் அங்கீகாரம் பெற்ற முகவா்கள் நிற்கும் பகுதியிலும் அடைப்புகளுடன் கூடிய கம்பிக் கூண்டுகள் அமைக்கப்படுகின்றன.

ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் பிரதீப்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். வழக்கமாக சவுக்கு மரங்களால் தடுப்புகள் ஏற்படுத்தப்படும்.

தேவையான இடங்களில் மட்டுமே கம்பிக் கூண்டுகள் அமைக்கப்படும். இந்த முறை அறைகளை முழுமையாக கம்பிக் கூண்டுகளால் அடைத்து பாதுாகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News