நத்தம் அருகே அரசு அனுமதி இன்றி மதுபாட்டிகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள செந்துறையில் அரசு அனுமதி இன்றி மது புட்டிகள் விற்பனை செய்தவரை நத்தம் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-16 11:26 GMT
கோப்பு படம்
நத்தம் அடுத்துள்ள செந்துறை பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீஸார் செந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செந்துறை நல்லபிச்சன்பட்டி பிரிவு பகுதியில் எர்ரம்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 100 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.