எம்எல்ஏ தொகுதி நிதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
பழநி எம்எல்ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டிபட்டி ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
Update: 2024-02-29 04:29 GMT
பழனி ஆண்டிபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பழனி எம்எல்ஏவிடம் முறையிட்டனர். இதையடுத்து பழநி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டிபட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சியில் நிழற் குடை, புதிய சிமெண்ட் சாலை பல்வேறு பணிகளை ஐ. பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் திண்டுக்கல் எம்.பி. வேல்சாமி உட்பட பங்கேற்றனர்.