கூடைப்பந்தாட்டப் போட்டி
கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது இரண்டாவது பரிசை சென்னை வருமானவரித்துறை அணி பெற்றது.
பெரியகுளம் சில்வர் ஜூப்பிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 63வது அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் இறுதி நாள் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது இரண்டாவது பரிசை சென்னை வருமானவரித்துறை அணி பெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 63 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் லீக் போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்று லீக் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடியது.
இதில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடத்திற்காக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் சென்னை வருமான வரித்துறை அணியும் விளையாடியதில் 72 க்கு 68 என்ற புள்ளி அடிப்படையில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாயும் அமரர் பிடி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கு பரிசு 40 ஆயிரம் ரூபாய்யும் அழகு சங்கரலிங்கம் செட்டியார் அவர்கள் நினைவு சுழற் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டி நடைபெற்றதில் . சென்னை விளையாட்டு விடுதி அணியும் திருவனந்தபுரம் கேரளா மின்வாரிய அணியும் மோதியதில் 78 க்கு 56 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னை விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று மூன்றாவது மூன்றாவது பரிசு 30 ஆயிரம் ரூபாய் அமரர் எல்.வி பொன்னையா பி சீத்தம்மாள் நினைவு சுழல் கோப்பையில் பரிசாக வழங்கப்பட்டது நான்காவது இடத்தைப் பிடித்த திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி பரிசு 20 ஆயிரம் ரூபாயும் அமரர் எஸ்பிபி செல்வகுமார பாண்டியன் நினைவு சுழல் கோப்பையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரணவ் பிரிண்ட்ஸ் என்ற வீரருக்கு தேனி அருண் மோட்டார் சார்பாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பிடி சிதம்பரம் சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பை காண 63 ஆவது அகில இந்திய கூடைடிப்பந்தாட்ட போட்டியை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் கூடைப்பந்தாட்ட ரசிகர்கள் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது