திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

Update: 2023-11-23 05:09 GMT
ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்றாகும். இது குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை சராசரியாக இருக்கும். விடுமுறை நாட்களில் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். சபரிமலை சீசன் தொடங்கும் போது குமரி மாவட்டம் வழியாக செல்லும் பக்தர்கள் திற்பரப்பு அருவியில் நீராடிவிட்டு அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் 509 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தற்போது திற்பரப்பருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த நான்கு நாட்களாக தடை வதிக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும்  ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Tags:    

Similar News