மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு பயனாளிகள் நன்றி
மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவிக்கப்பட்டது.
எலக்ட்ரானிக் தானியங்கி வண்டியை தமிழ்நாடு அரசின் மூலம் பெற்றுத் தந்த, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம் நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சுமதி. இவர் மாற்றுத்திறனாளி. இதே போல் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தில் வசிக்கும் அபிநயா மாற்றுத்திறனாளி இவர்கள் இருவரும் நடக்க முடியாத நிலையில்,
தானியங்கி எலக்ட்ரானிக் வண்டியை பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சங்கத்தின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.ராதிகா, ஒன்றியத் தலைவர் சிவகுமார், ஒன்றிய பொருளாளர் தில்லையம்மாள், ஒன்றியத் துணைத்தலைவர்கள் முருகேசன், துரைராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரை அணுகி, முயற்சி எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் ரீனா மித்ரா மகாலில், கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில்,
மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினர். அவற்றின் மதிப்பு ரூபாய் 3 லட்சம் ஆகும். சங்கத்தின் மூலம் சிறப்பு சக்கர நாட்களில் பெற்றுக் கொண்ட பயனாளிகள் இருவரும் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.