வீடு வேண்டி மனு அளித்த பயனாளி : கள ஆய்வு செய்த ஆட்சியர்!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வேண்டி மனு அளித்த பயனாளியின் வசிப்பிடத்தை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-15 06:01 GMT
ஆய்வு
காவனூர் ஊராட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடு அரசு வழங்க உள்ளது. இந்த நிலையில் பயனாளி கோபாலகிருஷ்ணன் தற்போது வசித்து வரும் வசிப்பிடம் மற்றும் அவரது குடும்ப சூழல் குறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் பயனாளியின் மனுவின் உறுதித்தன்மை சரியாக இருந்தது. ஆகவே அவருக்கு விரைவில் வீடு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆட்சியரின் ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.