பெருமாள் கோவிலில் குருப்பெயர்ச்சி பலன்கள்: பரிகார பூஜை

பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவில் குரு பெயர்ச்சி பலன்கள் பரிகார பூஜை நடந்தது.

Update: 2024-05-06 15:55 GMT

பரிகார பூஜை 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் 12 கிரகங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் பெறவும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பெறவும் பரிகார கலச பூஜை நடைபெறுகிறது.

இத்தலத்தில் ஜலத்திலேயே வீற்றிருக்கும் நாராயண மூர்த்தியை வணங்கினால் உடலில் ஏற்படும் அக்னி தாக்கத்தை குறைத்து, சரும வியாதியை போக்கி உடல் ஆரோக்கியம் பெறவும், குருப்பெயர்ச்சி பலனை பெறவும் பூஜை நடைபெற்றது.பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News