பகவதி அம்மன் கோவில் விழா - நாகர்கோவிலிருந்து சிறப்பு ரயில்கள்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-02-21 05:48 GMT
பைல் படம்

 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 25ஆம் தேதி அதிகாலை 2:15 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு மெமோ ரயில் அன்று அதிகாலை 3.02 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சேரும். இந்த ரயில் இரணியல்,  குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றங்கரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். 24 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் பரவூர், வர்க்கலா, மற்றும் கடைக்காவூர் ஒரு ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நிற்கும். அதே நாளில் மாலை நான்கு மணிக்கு மதுரை சந்திப்பில் இருந்த புறப்படும் திருவனந்தபுரம் அமிர்தா ரயில் பரவூர் மற்றும் சிறையின்கீழ் ஆகிய ரயில்வே நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.      

அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படும் அதிவேக ரயில்,  25 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் ரயில் போன்றவை  கழக்கூட்டம், சிர யின் கீழ்,  கடைக்காவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.      24ஆம் தேதி இரவு 11. 25 மணிக்கு புறப்படும் மதுரை புனலூர் ரயில் பள்ளியாடி, குழித்துறை மேற்கு மற்றும் பாலராமபுரம் கூடுதலாக நின்று செல்லும். 23ஆம் தேதி இரவு 9:25 மணிக்கு புறப்படும் ஜாம்நகர் திருநெல்வேலி ரயில் குழித்துறை மற்றும் இரணியல் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.        25ஆம் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயில் நேரம் பால ராமபுரம், தனு வச்சபுரம், பள்ளியாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் அன்றைய தினம் பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய கோச்சுவேலி நாகர்கோவில் ரயில் 3 40 மணி புறப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News