தமிழகத்தில் பாரதிய ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி - வானதி சீனிவாசன்

கன்னியாகுமரி பாஜக வேட்பாளார் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.;

Update: 2024-03-31 09:46 GMT
வானதி சீனிவாசன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பிரச்சாரத்தை தொடங்கி வைக்க பாரதிய ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவரும், எம்.எல்.ஏ வுமான வானதிசீனிவாசன் வருகை தந்திருந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை நமது நாட்டில் உள்ள அமைப்புகள். சட்டரீதியாக அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். தவறாக நடவடிக்கை எடுத்திருந்தாலும் உள்நோக்கம் இருந்தாலும் பாதுகாப்பதற்கு நீதிமன்றங்கள் உள்ளன.

Advertisement

அதனால் தவறு செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நீதியின் முன் பதில் சொல்லட்டும். பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு விரும்பிய சின்னம் கிடைக்கும் போது எதிரணிகளுக்கு வேறு சின்னங்கள் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் சட்டரீதியாக நடைமுறை வைத்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகள் அவர்கள் தூங்கி விட்டு அதற்குப் பின் சின்னம் கிடைக்கவில்லை என பாரதிய ஜனதா மீதும் குற்றம் சுமத்துகிறார்கள்.

தேர்தல் ஆணையம் வேண்டும் என்று சின்னம் ஒதுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். இதில் பாரதிய ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் தேர்தல் களம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். 2026 சட்டசபை சேர்த்தலில் பாரதிய ஜனதா தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். அதற்கான இலக்கில் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News