அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா;
சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து பாரத மொழிகளின் திருவிழா, பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தி.பாரதி தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர் ஞா . கலையரசி வரவேற்புரை ஆற்றினார். கணித இணை பேராசிரியர் முனைவர் வா.செந்தில் குமரன், உடற்கல்வி இயக்குனர் மொ.ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பசுமை மா.தில்லை சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதி பற்றி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி மரணம் இல்லா மகாகவி பாரதி பற்றி சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் அ . மோகனா நன்றியுரை கூறினார்.