பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவ பிரிவிற்கு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Update: 2024-02-10 01:30 GMT
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு, தீவிர அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு பிரவுகள் தனித்தனியாக இயங்கி வருகிறது.
சித்த மருத்துவ பிரிவிற்கு தனி கட்டடம் வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவிற்கு. புதிய கட்டிடம் கட்டும் பணிகள் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து, சித்த மருத்துவ அலுவலர் மருஜாகாகுலின்சித்ரா, சித்த மருத்துவர் விஜயன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.