அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட இடத்தில் தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை
அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட இடத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது.;
Update: 2024-03-08 06:19 GMT
பூமி பூஜை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தெப்பக்குளம் அருகே 4000 சதுர அடி நிலத்தில் இரண்டு பயணிகள் தங்கும் விடுதியை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன் கலந்து கொண்டு 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளை தொடங்கி வைத்தார். முதலில் இரண்டு அறைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் அறைகளை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு, கோவில் இணை ஆணையாளர் ரமணி காந்தன் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவல் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், அர்ஜுனன், அருணா சங்கர், பிரபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.