எடப்பாடி நகராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாட்டு நிதியிலிருந்து;
By : King News 24x7
Update: 2024-03-10 14:49 GMT
பூமி பூஜை
எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டான புதிய திட்டங்களுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு வீரப்பம்பாளையம் மற்றும் ஆலச்சம்பாளையம் ஆகிய பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக புதிய நியாய விலை கடை , புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல் போன்ற பல்வேறு புதிய திட்டபணிகளுக்கு இன்று எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு பூமிபூஜை எடப்பாடி நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் நகர கழக செயலாளருமான முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...