சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2023-12-13 05:59 GMT
 சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊனமளை கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊனமலை பகுதியில் கல்வெட்டு மற்றும் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர்.இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் , தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.5 இலட்சம் நிதி ஒதுக்கி ஊனமலை பகுதியில் கல்வெட்டு மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்  மரகதம் குமரவேல், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றய செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் சேரன் , முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆகியோர் அடிகல்நட்டு பூஜையை துவங்கி வைத்தனர்.இந்நிகழ்வின் போது ஊராட்சிமன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி  நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News