கீழ்ஈசல்ப்பட்டியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பூமி பூஜை
நல்லம்பள்ளி அருகே இலவசகுடிநீர் குழாய்இணைப்பு வழங்க பூமிபூஜை;
Update: 2024-02-23 05:02 GMT
பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சி, கீழ் ஈசல்பட்டியை அடுத்த அருந்ததியர் காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வேண்டி பல்வேறு முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு வந்த நிலையில் தற்போது அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் குழாய் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் Jr. சிவசக்தி தலைமையில் இன்று பூமி பூஜை செய்து வேலையை துவக்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.