புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை
வேதாரண்யம் தோப்புத்துறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடந்தது.;
வேதாரண்யம் தோப்புத்துறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தோப்புத்துறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வாகீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தோப்புத்துறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.8.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் த ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் .என்.கௌதமன் ஆகியோர் இன்று(05.02.2024) தொடங்கி வைத்தனர்.
வேதாண்யம் தோப்புத்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.423.84 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 18 வகுப்பறை, 1 ஆண்கள் கழிப்பறை மற்றும் 1 பெண்கள் கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்க்கான பூமி பூஜையினையும். கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.133.26 இலட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்க்கான பூமி பூஜையினையும், நாகக்குடையான் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.100.69 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 வகுப்பறை, 1 ஆண்கள் கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்க்கான பூமி பூஜையினையும், கோவில்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.22.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 1 வகுப்பறை, கட்டிடம் கட்டுவதற்க்கான பூமி பூஜையினையும், வேதாரண்யத்தில் ரூ.139 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு கிளை நூலகம் கட்டிடம் கட்டுவதற்க்கான பூமி பூஜையினையும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த காய்கறித்தோட்டம் மற்றும் மூலிகை தோட்ட பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்றத்தலைவர் புகழேந்தி, வேதாரண்யம் வட்டார ஆத்மா குழுத்தலைவர் சதாசிவம், மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் .உதயம் வே.முருகையன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் .மா.கா.சே.சுபாஷினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.நாராயணமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.