புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
இடங்கணசாலை நகராட்சியில் புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 08:40 GMT
புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பனங்காடு பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டுமான பணிகளுக்காக நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். அப்போது நகராட்சித் துணைத் தலைவர் தளபதி சேம்கிங்ஸ்டன் நகர மன்ற உறுப்பினர்கள் பொறியாளர் ஜெயலட்சுமி உட்பட பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.