சமுதாய நலக்கூடம் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், சார்வாய்புதூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-09 09:24 GMT

பூமிபூஜை

தலைவாசல் ஒன்றியம், சார்வாய்புதூர் ஊராட்சியில் தேவேந்திர குல வேளாளர் பகுதியில் தலைவாசல் ஒன்றிய பொது நிதி ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது. நல்லதம்பி எம். எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சார்வாய்பதூர் ஊராட்சி தலைவர் ராணிசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம், வரகூர் ஊராட்சி தலைவர் ராமசாமி, அ.தி. மு.க. இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News