அங்கன்வாடி கட்டிடம், தார்சாலை அமைக்க பூமிபூஜை

கருப்பூர், தாத்தியம்பட்டி பகுதியில் ரூ.56½ லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், தார்சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ மணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

Update: 2024-02-02 07:23 GMT

பூமி பூஜை 

சேலம் கருப்பூர் பேரூராட்சி 8-வது வார்டு கொல்லத்தெரு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட ஓமலூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அதேபோன்று தாத்தியம்பட்டி ஊராட்சி ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமிபூஜைகளுக்கு, அ.தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். கருப்பூர் நகர செயலாளர் கே.எஸ்.கோவிந்தசாமி தலைமை தாங்கினார்

. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி, கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். அவருக்கு கட்சியினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதில், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஓமலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் விக்னேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரர் திருமுருகன், நிர்வாகிகள் பாலு, குப்பன், அசோகன், சம்பத் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அங்கன்வாடி பணியாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News