மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் பலி

பாளையங்கோட்டை அருகே சாலையின் குறுக்கே மாடு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2024-06-01 07:15 GMT
மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் பலி

பைல் படம்

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா அக்கநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கருப்பசாமி (41). தொழிலாளியான இவர் நேற்று மதியம் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பாத்திமா கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் சாலையில் விழுந்த கருப்பசாமி பலத்த காயமடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News