பைக் விபத்து: எஸ்.எஸ்.ஐ., தலைமைக் காவலா் காயம்!

கழுகுமலை அருகே பைக்குகள் மோதியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் காயமடைந்தனர்.;

Update: 2024-05-25 05:34 GMT

கழுகுமலை அருகே பைக்குகள் மோதியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் காயமடைந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், தலைமைக் காவலா் ஜான் கென்னடி ஆகிய இருவரும் சம்பவத்தன்று இரவு பைக்கில் ரோந்து சென்றனர். பைக்கை ராஜ்மோகன் ஓட்டினாா். காலாங்கரைப்பட்டி செல்லியாரம்மன் கோயில் அருகே இவா்களது பைக்கும், எதிரே வந்த பைக்கும் மோதினவாம். இதில், ராஜ்மோகனும், ஜான் கென்னடியும் காயமடைந்தனர். தகவலின்பேரில், போலீசார் சென்று அவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டிவந்த காலாங்கரைப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ரா. செல்வராஜ் (41) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News