இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா, கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் மற்றும் கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி சார்பில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-21 02:06 GMT

விழிப்புணர்வு 

நாகை மாவட்ட நேருயுவகேந்திரா கீழ்வேளூர் ரோட்டரிசங்கம்  மற்றும் கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தன்னார்வலர்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் மாவட்ட நேருயுவகேந்திரா துணை இயக்குனர் எம்.திருநீலகண்டன்தலைமை வகித்தார். கீழ்வேளூர் ரோட்டரி சங்கத்தலைவர் தங்க.மோகன் அனைவரையும் வரவேற்றார். குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி,ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர் காமராஜ் சுவாமி விவேகானந்தருடைய திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி, புகழஞ்சலி செலுத்தினார். சிறப்பு விருந்தினராக, கீழ்வேளூர் வட்டாட்சியர் க.இரமேஷ்பங்கேற்று, சிறப்புரை வழங்கினார்.

கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன தலைமை(நோடல் அலுவலர் ஜி. இரவி தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி சங்கத்தின் மண்டலச் செயலாளர் . சந்திரசேகரன், திட்டக்குழு த்தலைவர்கள் Rtn.ப.ஜெயக்குமார், இரா. கண்ணையன்,.ரெ.நாகராஜன் பேராசிரியர்கள் அனுராதா, .கமல் குமரன்,.ஜி‌குமரசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கீழ்வேளூர் கடைவீதிகளில் வாகன முன்விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்வாகன விழிப்புணர்வு பேரணிநடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில், மாணவர்களுடைய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய தேசிய இளைஞர் தின சிறப்பு பேச்சு இளைஞர்களுக்கு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதியில், நேருயுவகேந்திரா மதியழகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News