திருப்பூரில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூரில் நடைபெற்ற இருசக்க வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-26 07:42 GMT
100% வாக்களிப்பதை  உறுதி செய்யும் வகையில் ஊரில் நடைபெற்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். வாக்களிப்பது நம் உரிமை ,  18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
Tags:    

Similar News