பைக்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்: முதியவர் உயிரிழப்பு

பவானி அருகே பைக் -அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனதில் முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2024-03-23 12:51 GMT

காவல் நிலையம்

 ஈரோடு மாவட்டம், பவானி, பி கே புதூர் அருகே உள்ள கணபதிநகரை சேர்ந்தவர் திருப்பதி வயது 43. இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மார்ச் 21ஆம் தேதி மதியம் 3:40 மணியளவில்,

கரூர் மாவட்டம், தென்னிலையில் இருந்து சின்ன தாராபுரம் செல்லும் சாலையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார் திருப்பதி. அப்போது, எதிர்திசையில் தென்னிலை கிழக்கு, மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூவீலர், அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடேசன் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் திருப்பதி, காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த நடேசன் உடலை கைப்பற்றி,

உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News