கரூர் அருகே பைக்-லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் படுகாயம்
கரூர் அருகே பைக் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் சத்திரம் பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் வயது 48. இவர் ஜனவரி 31ஆம் தேதி காலை 8 மணி அளவில், அவருக்கு சொந்தமான பைக்கில் வாகனத்தில் புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம், வேலாயுதம்பாளையம் ஆர்.ஜி.நகர், இரண்டாவது தெரு பிரிவு அருகே வந்தபோது, கரூர், ராயனூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டி, அன்பு நகர், 1வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், வேகமாக ஓட்டி வந்த டிப்பர் லாரி, எதிர் திசையில் வந்த கோபாலகிருஷ்ணன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் கோபாலகிருஷ்ணனுக்கு தலை, இடது கால், இடது தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி,விபத்து ஏற்படுத்திய ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.