மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் பயணம் : அபராதம்!
தூத்துக்குடியில் அதிக சத்தத்துடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் ரூ 15 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
Update: 2024-02-19 10:06 GMT
தூத்துக்குடியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் பைக்கில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் அதிக பட்சமாக ரூ 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். வி.வி.டி. சிக்னல் மற்றும் பிரதான சாலைகளில் மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் கொண்ட வாகனங்கள், லைசென்ஸ் இல்லாமல் சென்றது, அதிக வேகத்துடன் வாகனம் ஓட்டியது உட்பட 175 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து விதிமுறை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினர்.