நாகர்கோவிலில் லாரி மோதி பைக்குகள் சேதம்

நாகர்கோவிலில் லாரி மோதி பைக்குகள் சேதம் அடைந்தது.

Update: 2024-05-09 13:41 GMT
நாகர்கோவிலில் இன்று டிரான்ஸ்பார்மர், கார், பைக்குகளில் மோதிய டாரஸ் லாரி

குமரி மாவட்டம் பார்வதிபுரத்திலிருந்து வடசேரி நோக்கி நேற்று காலை டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வெட்டுர்ணிமடம் பகுதியில் லாரி செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது டாரஸ் லாரி மோதியது.

இதில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி சேதம் அடைந்தது. மேலும் அந்தப் பகுதியில் நின்ற கார் மீதும் மோதி, கார் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த டாரஸ் லாரி, அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் ட்ரான்ஸ்பார்மர் உடைந்தது. மேலும் மின்கம்பம் ஒன்றும் சேதமடைந்தது.

இதை அடுத்து அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டாரஸ் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும்,

நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் சீரமைப்பு பணி செய்தனர்.

Tags:    

Similar News