பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பைக், பணம் பறிமுதல் !!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழவாளாடி அக்ரஹாரம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர். மோட்டார் பைக், பணம் பறிமுதல் .;

Update: 2024-05-23 10:26 GMT
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பைக், பணம் பறிமுதல் !!!

காவல் நிலையம்

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழவாளாடி அக்ரஹாரம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவதாக லால்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் வேல், சுந்தரம், முருகேசன், செல்வம், சந்தோஷ்குமார்,வினோத், உலகநாதன் கார்த்திக் ஆகியோர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டாட்டத்தில் பயன்படுத்திய ரூ. 6400 பணம் 3 மோட்டார் பைக் இரண்டு சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News