கீழ்வேளூரில் இருதரப்பினர் மோதல்: போலீசார் விசாரணை

கீழ்வேளூர் வயல் வழியாக அறுவடை இயந்திரத்தை கொண்டு சென்ற பிரச்சனையில் ஏற்பட்ட தாக்குதலில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்;

Update: 2024-02-15 09:19 GMT

காவல் நிலையம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட கடம்பர வாழ்க்கை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் திருமாவளவன் அதே பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் ராஜேந்திரன் கடந்த ஏழாம் தேதி காலை 8 மணிக்கு திருமாவளவன் வயல் வழியாக ராஜேந்திரன் அறுவடை இயந்திரத்தை கொண்டு சென்றுள்ளார்.

இதனை கண்ட திருமாவளவன் ஏன் என் வயல் வழியாக கொண்டு செல்கிறார் என கேட்டுள்ளார் அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் திருமாவளவன் ஆபாசமாக திட்டி அருவாளால் தாக்கி கொலை பெற்று விட்டு சென்றுள்ளார்.

Advertisement

இதில் காயமடைந்த திருமாவளவன் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக திருமாவளவன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 14 புதன்கிழமை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  இந்த நிலையில் ராஜேந்திரன் தன்னை திருமாவளவன் ஆபாசமாக திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார் இரு புகார்களையும் தனித்தனி வழக்காக பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags:    

Similar News