சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை 2-வது நாளாக நடத்தியது

Update: 2024-03-04 01:16 GMT

பைல் படம்

வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிலப்பரப்பு மற்றும் ஈர நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங்ரவி தலைமையில் ஏற்காடு வனப்பகுதியிலும், குரும்பப்பட்டி, காப்புக்காடு பகுதிகளில் வன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் கணக்கெடுப்பணி நடைபெற்றது.

இது குறித்து வன அலுவலர்களிடம் கேட்ட போது, இந்த கணக்கெடுப்பில் நீலமுக பூங்குயில், வெண்பிடரி பட்டாணி குருவி, பச்சை பஞ்சுருட்டான் உள்ளிட்ட பல அரிய வகை பறவைகள் கணக்கெடுத்து பதிவு செய்யப்பட்டு உள்ளன. பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று (நேற்று) முடிவடைந்து விட்டது. பறவைகள் பட்டியல் தயாரித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினர்.

Tags:    

Similar News