தமிழக கேரள எல்லை பகுதிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு சோதனை முகாம்

தமிழக கேரள எல்லை பகுதிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து சோதனை நடத்தப்பட்டது.

Update: 2024-04-22 13:43 GMT
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் எதிரொலியாக தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பறவை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழக கேரளா எல்லையான குமுளி கம்பம் மெட்டு முந்தல் உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதிகளில் தடுப்பு முகாம் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Tags:    

Similar News