நெற்பயிரில் பூச்சிகளை ஒழிக்க பறவை குடில்களை அமைக்கலாம் !

பறவை குடில்களை அமைப்பதன் மூலம் நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-02 05:04 GMT

பறவை குடில்களை அமைப்பதன் மூலம் நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நெற்பயிர்கள் பூக்கும் பருவத்திலும் கதிர் முற்றும் பருவத்திலும் உள்ளன. இலை மடக்கு புழு, தண்டு துளைப்பான், புகையான் அதிகம் காணப்படுகிறது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தாலே பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்கலாம் எனவும் தற்போதைய பூக்கும் மற்றும் கதிர் பருவத்தில் அதிக அளவிலான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் . குறிப்பாக தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்ணுகின்ற பறவைகள் உட்காருவதற்கான இடங்களை வயலில் அமைப்பதனால் அந்த பறவைகள் பூச்சிகள் மற்றும் புழுக்களை பிடித்து உண்கின்றனர். இதை அமைப்பதற்கு மூங்கில் குச்சி மரக்குச்சி அல்லது மரக்கிளைகளை மூன்றடி உயரத்தில் ஆங்கில T எழுத்து வடிவத்தில் நெல் வயலில் ஆங்காங்கே நட்டு வைத்தால் போதுமானது. எனவே பறவை குடில்களை அமைப்பதன் மூலம் நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News